ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2க பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம்சுமார் 30 முதல் 40 வினாடிகள் நீடித்தது.நடப்பது என்னவென்று அறிய மக்கள் ஜியோசயன்ஸ் ஆஸ்திரேலியா
இணையதளத்திற்கு சென்றதால் அது செயல் இழந்தது. பிரைட், மிர்ட்டில்போர்டு, வான்தாகி உள்ளிட்ட இடங்களிலும் நில அதி்ர்வு உணரப்பட்டது.
இது குறித்து சான் என்னும் பெண் கூறுகையில்,
நான் பெட்டில் படுத்திருந்தேன். அப்போது திடீர் என்று எனது அறை குலுங்கியது. விளக்குகள் ஆடின. ஜன்னல் கதவுகள் அடித்துக் கொண்டன என்றார்.
க்யூ என்ற இடத்தைச் சேர்ந்த ரான் ஸ்மித் என்பவர் கூறுகையில், ஏதோ சத்தம் கேட்டது, நாங்கள் காற்று என்று நினைத்தோம். பார்த்தால் திடீர் என்று வீடே குலுங்கியது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக