வெள்ளி, அக்டோபர் 19, 2012

4 நாள் யுத்த நிறுத்தம், நாம் தயார்? அவர்கள் தயாரா?

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த 17 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஒடுக்க அரசு படைகள் தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் அப்பாவி பொது மக்களும், போராட்டக்காரர்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்களும் அரசுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகின்றனர். சிரியாவில் அமைதியான சூழலை
உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இந்த மாத இறுதியில் 4 நாட்கள் யுத்த நிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்க தயாராக இருப்பதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது. “ஆனால், போராளி அமைப்பினரை இந்த யுத்த நிறுத்தத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு, சமாதானப் பேச்சுக்களில் அக்கறை செலுத்தும் அரபு நாடுகளுடையது” என்றும் கூறியுள்ளது.
19 வருட யுத்தத்தின், முதலாவது சமாதான சிக்னல் இது.
சிரியா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், “ஐ.நா. தூதுவர் லக்தார் பிரஹிமி யுத்த நிறுத்தம் குறித்து கொடுத்த ஆலோசனைகளை பரிசீலிக்கிறோம். அதே நேரத்தில், போராளி அமைப்பினரும் அதற்கு சம்மதிப்பார்கள் என்ற உறுதிதொழி எமக்கு தேவை” என்று தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் வரவுள்ள பக்ரித்(தியாக திருநாள்) பண்டிகையின்போது, யுத்த நிறுத்தம் செய்வது என்பதே, தற்போதைய உத்தேசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக