வியாழன், அக்டோபர் 11, 2012

சிரியா நாட்டின் பயணிகள் விமானம் துருக்கி போர் விமானங்களால் இடைமறித்து இறக்கம் !

சிரியா நாட்டின் பயணிகள் விமானம் துருக்கி போர் விமானங்களால் இடைமறித்து இறக்கம்சமீபத்தில் சிரியா ராணுவம் எல்லையில் நடத்திய மார்டர் குண்டு தாக்குதலில் துருக்கியில் 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிரியா மற்றும் துருக்கி இடையே பிரச்சினை வலுத்தது. துருக்கி எல்லைப் பகுதியில், சிரியா தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று நேற்று துருக்கி அறிவித்தது. துருக்கி விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுதத் தடவாளங்களும் செல்லக்கூடாது என்று அரசு முன்னரே முடிவெடுத்திருந்தது.  

இந்நிலையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து சிரியாத் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி ஏ 320 ஏர்பஸ் விமானம் சென்றது. 180 பேர் பயணிக்கக் கூடிய இந்த சிரியாவிற்கு சொந்தமான விமானத்தில் 33 பயணிகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்று செய்திகள் வந்தன. இதைத்தொடர்ந்து  அந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் இடைமறித்து அங்காராவில் இறக்கின. அந்த விமானத்திலிருந்த ராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது என்று துருக்கி அரசு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக