வெள்ளி, அக்டோபர் 12, 2012

தமிழகத்து 8.75 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு அதிரடி உத்தரவு !

தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் முழுவதும் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி கண்காணிப்பு குழு கர்நாடக அரசுக்கு இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவினர் கடந்த 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளில் ஆய்வு செய்தது. இந்த ஆய்விற்கு பிறகு  டெல்லி சென்ற பின் இன்று நடைபெற்ற இந்த குழுவின் கூட்டத்தில், தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் மாதம் இறுதி வரை 8.75 டிஎம்சி
தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அதன் செயலாளர் டி.வி.சிங்  உத்தரவிட்டார்.
இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் மற்றும் கர்நாடக அதிகாரிகளின் வாதத்திற்கு பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவையும் கர்நாடக அரசு புறக்கணித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக