வெள்ளி, அக்டோபர் 19, 2012

‘நான் நலமாக உள்ளேன்!’ – ஃபிடல் காஸ்ட்ரோ

ஹவானா:கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் நிலை குறித்து மேலை நாட்டு ஊடகங்கள் மூலம் பல்வேறு வதந்திகள் வெளியாகி வரும் நிலையில், தான் நலமாக இருப்பதாக காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். 86 வயதான ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதி போப் பெனடிக்கின் வருகையின் போதும், ஏப்ரல் 5-ந் தேதி சிலி மாணவர் இயக்கத் தலைவர் கமில வாலிஜோவின் வருகையின் போதும் மட்டும் பொது
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  ஆனால், அதற்கு பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, காஸ்ட்ரோவின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகளை மேலைநாட்டு ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் நலமாக இருப்பதாக காஸ்ட்ரோ நாட்டு மக்களுக்கு அனுப்பிய தகவலை சுகாதார அமைச்சர் ஹவானாவில் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக