வெள்ளி, அக்டோபர் 05, 2012

ஆர்.எஸ்.எஸ் கொடுத்த நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறித் திளைத்தவர் நரேந்திர மோடி : திக்விஜய் சிங் !

டெல்லி: பொய்யைச் சொல்லுங்கள், அதை உரக்கச் சொல்லுங்கள், உறுதியாககச் சொல்லுங்கள், நூறு  முறை சொல்லுங்கள் என்பதுதான் நாஜிக்களின் தத்துவம்.  அதைத்தான் ஆர்எஸ்எஸ்ஸும் கடைப்பிடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கொடுத்த நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறித் திளைத்தவர்  நரேந்திர மோடி. அதனால்தான் கொடும் உள் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தியின் மருத்துவச் செலவுகள் குறித்து அவதூறாகக் கேள்வி கேட்கிறார் அவர் என்று  காங்கிரஸ் பொதுச்
செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் திக்விஜய் சிங் கூறுகையில்,
நாஜி பாரம்பரிய பயிற்சியை நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் கொடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ்  எப்போதுமே அப்படித்தான். அதற்கு மோடி மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா.  அவரும் நன்றாகவே பயிற்சி எடுத்துள்ளார்.
நாஜிக்களின் பாரம்பரியமே அவதூறாகப் பேசுவது, உள்நோக்கத்துடன் தவறான  குற்றச்சாட்டுக்களை வைப்பதுதான். அதைத்தான் தற்போது மோடியும் செய்து வருகிறார்.  பொய்யைச் சொல்லுங்கள், அதை உரக்கச் சொல்லுங்கள், உறுதியாககச் சொல்லுங்கள், நூறு  முறை சொல்லுங்கள் என்பதுதான் நாஜிக்களின் தத்துவம். அதைத்தான் ஆர்எஸ்எஸ்ஸும் தனது  தொண்டர்களுக்குச் சொல்லித் தருகிறது.
குஜராத் முதல்வருக்கும், நாஜிக்களின் பொய்ப் புளுகன் ஜோசப் கோயபல்ஸுக்கும் இடையே  எந்த வித்தியாசமும் இல்லை. மோடியை நினைத்தால் கோயபல்ஸ் தான் நினைவுக்கு  வருகிறார்.
மிகவும் மலிவான மன நிலையில், குறுகிய உள்நோக்கத்துடன் சோனியா காந்தியின் செலவுக்  கணக்கைக் கேட்கிறார் மோடி. ஒருவரின் உடல் ஆரோக்கிய விஷயத்தை அரசியலாகக்  முயற்சிக்கிறார்கள் என்றார் திக்விஜய் சிங்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக