வியாழன், அக்டோபர் 04, 2012

ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் காலமானார் . . .

இஸ்லாம் மத அறிஞரும், ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் அமைப்பின் முன்னாள் தலைவருமான டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி இன்று அலிகரில் காலமானார். 81வயதாகும் அன்சாரி உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தத்துவயியலில் முதுநிலை பட்டமும் முனைவர் பட்டமும் பெற்ற அன்சாரி மத ஒப்பீட்டியலில் நன்கு புலமை வாய்ந்தவராவார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மதஒப்பீட்டியலில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். 2003 - 2007 காலகட்டத்தில் ஜமாஅத் இஸ்லாமியின் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் ஆலோசனை குழுவில் அங்கம் வகித்துவந்த அப்துல் ஹக் அன்சாரி பல நூல்களை எழுதியும்,
பல கருத்தரங்குகளில் பங்கேற்றும் சிறப்பு பெற்றவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக