புதன், அக்டோபர் 10, 2012

ரஷ்யாவில் ஆயுதக்கிடங்கு வெடிப்பு: மக்கள் அலறியடித்து ஓட்டம் !

ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் ஓரன்பர்க் நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது டோங்குஷ் ராணுவ வளாகம். இங்குள்ள ஆயுதக்கிடங்கு எதிர்பாராத விதமாக நேற்று வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் விமானக்குண்டுகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் என பயன்படுத்தபடாமல் இருந்த 4000 டன் பழைய வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறின.  தொடர் வெடிச் சத்தம் மற்றும் புகைமூட்டத்தை கண்ட அப்பகுதி மக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். விரைந்து வந்த மீட்புப்படையினர், மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர். இதில் அப்பகுதி வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்களின் கதவுகள் உடைந்து நொறுங்கின. இருந்தும் யாரும் பாதிக்கப் படவில்லை என பாதுகாப்பு துறை கூறியுள்ளது. 
 
கடந்த ஜூலையில் நடந்த ஆயுதக்கிடங்கு வெடிப்பின் போது 20,000 மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். ரஷ்யா பழைய ஆயுதங்களை நிறைய வைத்திருப்பதாகவும் இவை சரியாகப் பராமரிக்கப் படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக