செவ்வாய், அக்டோபர் 02, 2012

யெமன் நாட்டில் மக்கள் தொகையில் பாதிபேரும் பட்டினியால் வாடும் அவலம்

ஸன்ஆ:யெமன் நாட்டின் மக்கள் தொகையில் பாதிபேரும் உணவு இல்லாமலேயே இரவை கழிப்பதாக வேல்ட் ஃபுட் ப்ரோக்ராம்(W.F.P) அறிக்கை கூறுகிறது. உள்நாட்டு வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக் காரணமாக மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று W.F.P செய்தித் தொடர்பாளர் பாரி கெயிம் தெரிவித்துள்ளார். குழந்தைகளில் ஊட்டச்சத்துக்குறைபாட்டில் உலகில் 3-வது இடத்தை யெமன் வகிக்கிறது. 33 சதவீத குழந்தைகளும் இந்நாட்டில்
ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள், உணவுப் பொருட்களில் விலை அதிகரித்தது நிலைமையை மோசமாக்கியுள்ளது. மக்கள் தொகையில் 22 சதவீதம் பேருக்கு சாப்பிடுவதற்கு உணவு கிடைப்பதில்லை. விலை அதிகரிப்புக் காரணமாக இவர்களால் உணவுப் பொருட்களை வாங்க முடியவில்லை என்று கெயிம் கூறுகிறார்.
அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் 33 ஆண்டுகள் நீடித்த ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு உருவான மக்கள் புரட்சியைத் தொடர்ந்து யெமன் கடுமையான பட்டினியை நோக்கிச் சென்றது. ஸாலிஹ் வெளியேறிய பிறகும், புதிய அரசால் நிலைமையை சீராக்க முடியவில்லை. இதனைத் தவிர தெற்கு யெமனில் போராளிகள் நடத்தும் தாக்குதலும் நிலைமையை சீர்குலைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக