செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஹாங்காங்: படகுகள் மோதிக்கொண்ட விபத்தில் 25 பேர் பலி !

சீனாவின் தேசிய நாள் மற்றும் இலையுதிர் காலக் கொண்டாட்டம் என அப்பகுதி மக்கள் படகுப் போக்குவரத்துகளில் பிசியாக ஈடுபட்டிருந்தனர். 121 பயணிகள் மற்றும் 3 வானவேடிக்கை வீரர்களுடன் சென்ற நாட்டுப்படகை பின்னே வந்த மற்றொரு படகு நேற்று இரவு மிக வேகமாக மோதியது. லம்மா என்னும் தீவுக்கு அருகில் நடந்த இந்த விபத்தில் படகுகள் பாதிக்கு மேல் முழ்கிவிட்ட நிலையில் பலர் தண்ணீருக்குள் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். விரைந்து வந்த மீட்புப் படையினர் கடுமையான குளிரில் தத்தளித்துக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
வெளியே எடுக்கப்பட்டவரின் 25 பேர் இறந்த நிலையிலே இருந்துள்ளனர். சிலர் உடலின் வெப்ப நிலை மிகவும் குறைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஹாங் காங் கடல் பகுதி உலகிலேயே மிகவும் பரபரப்பாக கப்பல் போக்குவரத்து உள்ள பகுதி என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக