யங்கூன்:இன கலவரத்தை தொடர்ந்து புலன்பெயர்ந்து அகதிகள் முகாமில் வசிக்கும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் துயரங்களை அனுபவிப்பதாக புலன் பெயர்ந்தோருக்காக பாடுபடும் அமைப்பான ரெஃப்யூஜீஸ் இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கு ஐ.நா வின் உதவி கிடைத்த போதிலும் முகாம்களில் வாழ்க்கை
சூழல் மிகவும் மோசமானதாக உள்ளது என்று ரெஃப்யூஜீஸ் இண்டர்நேசனல் கூறுகிறது. ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் காசநோயால் குழந்தைகள் அல்லலுறுவதாக ரெஃப்யூஜீஸ் இண்டர்நேசனல் இயக்குநர் ஸார்நதா ரெய்னால்ட்ச் கூறுகிறார்.
கடந்த மே மாதம் மியான்மரின் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாதிகள் அரசு ஆதரவுடன் நடத்திய இனப்படுகொலைகளில் 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இவர்களை அவசர கால நடவடிக்கையாக மறுவாழ்வு அளிக்க மியான்மர் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெய்னால்ட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக