இலங்கை அதிபர் ராஜபக்சவை மத்தியப்பிரதேசத்திற்கு அழைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,"காந்தியை கொன்ற கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என காட்டமாக பேசியுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் 21 ம் தேதி புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிறார். லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற
ராஜபக்சவை இந்நிகழ்ச்சிக்கு ராஜபக்சவை அழைக்கக்கூடாது என்று மத்தியப்பிரதேச முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய வைகோ,ராஜபக்ச வந்தால் அவருக்கு எதிராக தமது தலைமையில் மத்தியப்பிரதேசத்திற்கே வந்து சாஞ்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் வைகோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும்,ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறும் மத்தியப்பிரதேச முதல்வர் வைகோவுக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து திட்டமிட்டபடி செப்டம்பர் 21 ம் தேதியன்று சாஞ்சியில் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்திருந்தார்.
அதன்படி மதிமுகவினர் இன்று மத்தியப்பிரதேசத்திற்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.இதனையயொட்டி சென்னை அண்ணா சமதியில் இன்று மாலை திரண்ட கட்சியினர் மத்தியில் பேசிய வைகோ,ராஜபக்சவை மத்தியப்பிரதேசத்திற்கு அழைத்ததற்காக பா.ஜனதாவை கடுமையாக சாடினார்.
கோட்சே கும்பல்
"காந்தியை கொன்ற கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என காட்டமாக கூறிய அவர்,”லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபக்சவை ஏற்கனவே இந்தியாவுக்கு அழைத்து பலமுறை விருந்தளிக்கப்பட்டுள்ளது.தற்போது பா.ஜனதாவினர் விருந்தளிக்கின்றனர்” என்றார்.
மேலும் வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சிகளும் தமிழர் விரோத போக்கை கடைபிடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக