தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. கிரானைட் குவாரிகளில் நடத்தப்பட்ட நரபலி பூஜைகளுக்கு மூளையாக செயல்பட்ட மந்திரவாதி ராடு குமாரைத் தேடிக் கண்டுபிடித்து லாடம் கட்ட போலீஸ் மும்முரம் காட்டி வருகிறது. கிரானைட் கொள்ளை அம்பலத்துக்கு வந்தபோதே நரபலி விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது. கிரானைட் குவாரிகளில் புதிய இயந்திரங்களை வைத்து இயக்கும் போதும் பூமி பூஜை போடும் போதும் நரபலிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒடிஷா இளைஞன் ஒருவன் மீது கிரேனை ஏற்றி பலி கொடுத்த தகவலும் இப்பொழுது போலீஸ் வசம். இந்த இரண்டு நரபலிகளுக்கும் மூளையாக செயல்பட்டவன்தான் மந்திரவாதி ராடு குமார். இவன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும் கேரளம் சென்று மலையாள மாந்திரீகம் கற்றவனாம். இப்பொழுது ராடு குமாரைக் கண்டுபிடித்து லாடம் கட்ட தேடுகிறது போலீஸ். அத்துடன் நரபலிக்காக வடமாநில இளைஞர்களை அழைத்து வரும் மாதேஷ் என்கிற கொலைகாரதரகனையும் போலீஸ் தேடுகிறது.
கொலைகள்?
நரபலி சம்பவங்களைப் போல பல கொலைகளும் கூட கிரானைட் குவாரிகளில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கீழவளவு குவாரியில் மண்ணெண்ணெயைத் திருடி விற்றான் என்ற குற்றத்துக்காக வடநாட்டு பையன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் இன்னும் எத்தனை கொலைகள் குவாரிகளில் நடந்திருக்கின்றன என்ற விசாரணையையும் தோண்டியெடுக்கிறது மதுரை போலீஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக