செவ்வாய், செப்டம்பர் 18, 2012

மெக்சிகோவில் கை, கால்களை கட்டி 17 பேர் கொலை: போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டூழியம் !

மெக்சிகோவில் கை, கால்களை கட்டி 17 பேர் கொலை: போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டூழியம்மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பெரும் தொழிலாக நடைபெற்று வருகிறது. தொழில் போட்டியில் இந்த கும்பல்கள் கொடூர கொலைகளையும் செய்கிறார்கள். ஒரே நேரத்தில் பலரை கூண்டோடு கொலை செய்து பிணங்களை அனாதையாக வீசி விட்டு மாயமாகி விடுவார்கள். இந்நிலையில் மெக்சிகோவின் மேற்கே அமைந்துள்ள திசாபான் எல் அல்டோ என்ற ஊருக்கு அருகே நேற்று சாலையோரம் 17 பேர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
 
உடனே சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டனர். இந்த 17 பேரின் கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு கழுத்தோடு இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் உடல்கள் அரை நிர்வாணமாக இருந்தன. எனவே இது போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்டூழியமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக