கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 73 மற்றும் 141-வது வழக்கு விசாரணைக்காக வள்ளியூர் கோர்ட்டில் 18-ந்தேதி ஆஜராகுமாறு உதயகுமாருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி மீரா இன்று கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் உதயகுமார் வரவில்லை.இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தொடங்கியது. வழக்கு விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் ராஜ்பால் மற்றும் அரசு வக்கீல் குருதாஸ் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வக்கீல்
இதற்கு அணுமின் நிலைய எதிர்ப்பு வக்கீல்கள் செந்தில், ரமேஷ், ராஜரத்தினம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்களது வாதத்தில்,64-வது விதிகளின்படி உதயகுமாருக்கான சம்மன் அவரது தந்தையிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
64-வது விதியின்படி சம்மன் கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் போலீசார் அவரது வீட்டிற்கு பல முறை சென்றிருக்க வேண்டும். அதன் பிறகும் அவரை காணவில்லை என்றால் கிராம நிர்வாக அதிகாரி மூலம் நோட்டீஸ் ஒட்டியிருக்க வேண்டும்.
அந்த நோட்டீஸ் கொடுத்த பிறகும் உதயகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 64-வது விதிகளின்படி வீட்டின் மூத்த ஆண் மகனான உதயகுமாரின் தந்தையிடம் சம்மன் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதில் எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே உதயகுமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்க கூடாது என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிறிஸ்டல் பபிதா, இன்று பிற்பகல் உதயகுமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக