
ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:
எப்பாடு பட்டாவது, கர்நாடகத்திலிருந்து தண்ணீர் விடுவதை தடுக்க முயற்சிப்போம். கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலைமை குறித்து, பிரதமருக்கு எடுத்துரைப்போம். ஏற்கனவே தமிழகத்திற்கு போதுமான தண்ணீர் விடப்பட்டுள்ளது. மீண்டும் தண்ணீர் தருமாறு தமிழகம் வற்புறுத்துவது சரியல்ல. இதையும் காவிரி நதி நீர் ஆணையத்தில், பிரதமரிடம் எடுத்துரைப்போம். எங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, பிரதமர் நல்ல முடிவெடுப்பார் என, நம்புகிறோம். இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை: காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய வாதங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
டில்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படுவதும், வறட்சி காலத்தில், காவிரி நீர் பங்கீடு எப்படி என்பதை முடிவு செய்யவும் உதவிடும். இதில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நிதியமைச்சர், தலைமைச் செயலர், பொதுப்பணித் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் டில்லி செல்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா நாளை காலை 11 மணிக்கு விமானம் மூலம் டில்லி செல்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது சம்பா சாகுபடிக்கு காவிரி நீரின் தேவை அதிகளவில் இருப்பதால், இன்று நடக்கும் கூட்டத்தில், தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், ராமலிங்கம் மற்றும் தலைமைச் செயலர் தேபேந்திர நாத் சாரங்கி, பொதுப்பணித் துறை செயலர் சாய்குமார், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில், டில்லியில், தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் மற்றும் அம்சங்கள் குறித்தும், தமிழகத்தின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக