திங்கள், செப்டம்பர் 17, 2012

ஆப்கான்:ஆக்கிரமிப்பு படையினருக்கு சோகமான நாட்கள்! போலீஸ்காரர் சுட்டு 4 நேட்டோ படையினர் பலி !

Afghan cop guns down 4 US troopsகாபூல்:ஆஃப்கானிஸ்தான் போலீஸ்காரர் ஒருவர் நான்கு நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினரை சுட்டுக் கொலைச் செய்துள்ளார். தெற்கு ஆஃப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் செக்போஸ்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பிறகு ஐந்து ஆஃப்கான் போலீசாரை காணவில்லை. ஆனால், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை நேட்டோ படையினர்
கொலைச் செய்துள்ளனர். காணாமல் போன போலீசாருக்கு துப்பாக்கிச்சூட்டில் தொடர்பு இருக்கிறதா? என்பது உறுதிச் செய்யப்படவில்லை. ஆனால், பயந்துபோய் இவர்கள் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த சம்பவத்தின் மூலம் இவ்வாண்டு ஆஃப்கானிஸ்தானில் போலீஸ் காரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு ஆஃப்கானிஸ்தானில் ஹெல்மந்தில் உள்ள செக்பாயிண்டில் நேற்று முன்தினம் 2 பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஹெல்மந்த் ராணுவ தளத்தில் ராணுவ சேவைப்புரிய வந்த இளவரசர் ஹாரியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அமெரிக்க கப்பற்படையினர் கொல்லப்பட்டனர். நேட்டோவின் 6 போர் விமானங்கள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் தகர்க்கப்பட்டன.
அண்மைக் காலமாக நேட்டோ ஆக்கிரமிப்பு படையினர் தாலிபான் போராளிகள் மற்றும் ஆஃப்கான் போலீசாரின் தாக்குதலில் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அதனிடையே, நேட்டோ படையினர் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் லக்மான் மாகாணத்தில் விறகு பொறுக்கச் சென்ற அப்பாவி பெண்கள் எட்டுபேர் பலியானார்கள். பலியான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்களை ஊர்மக்கள் மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாக மாகாண செய்தித் தொடர்பாளர் ஸர்வாதி ஸிவாக் கூறினார். தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நேட்டோ படையினர் தாக்குதலில் 45 போராளிகள் கொல்லப்பட்டதாக பொய்யை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக