நாட்டில் உள்ள பல கோடி மக்களின் வேலை வாய்ப்புகளை பாதிக்கும் வகையில், நேரடி அன்னிய முதலீட்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கின் சேவை, எங்களுக்கு தேவை இல்லை. அவர் ஏற்கனவே பணியாற்றிய, உலகி வங்கிக்கு சென்று, தன் சேவையை தொடரலாம்,'' என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறினார். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், கூறியதாவது: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவு, அவசர நிலை காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை போல் உள்ளது. மத்திய அரசு, தற்போது எடுத்துள்ள முடிவால், நாட்டில் உள்ள பல கோடி
மக்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும்.
இதுபோன்ற முடிவுகளை எடுக்கும், மன்மோகன் சிங்கின் சேவை, எங்களுக்கு தேவை இல்லை. அவர், ஏற்கனவே பணியாற்றிய உலக வங்கிக்கு சென்று, தன் சேவையை தொடரட்டும். திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், உலக வங்கிக்கு செல்லட்டும்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரம், திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக, மக்களை பசியில் வாட விட்டு விடுவர். டீசல் விலை உயர்வு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி போன்ற முடிவுகளை, வாபஸ் பெறக் கோரி, திரிணமுல் தலைவர் மம்தா, மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளார். அவரது கெடு, போலியாக இருக்காது என்ற, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக