டெல்அவீவ்:ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்காக காத்திருக்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு அமெரிக்காவின் துணை இல்லாமலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று ஒரு இஸ்ரேல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரான் விவகாரத்தில் ஒபாமாவின் நிலைப்பாட்டில் நெதன்யாகுவிற்கு இதுவரை கோபம் தீரவில்லை என்பதை அவரது பேட்டி
சுட்டிக்காட்டுகிறது. ஈரான் விவகாரத்தில் ராணுவ நடவடிக்கையை விட ராஜதந்திர நடவடிக்கைகள் தாம் தேவை என்பது ஒபாமாவின் நிலைப்பாடு. இதனைத் தொடர்ந்து நட்பு நாடுகளான அமெரிக்கா-இஸ்ரேல் இடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் கோபத்தை தணிக்க ஒபாமா, சில தினங்களுக்கு முன்பு ஒபாமா, நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார். இதனால் இஸ்ரேலின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பது நெதன்யாகுவின் பேட்டியில் இருந்து தெரியவருகிறது.
‘ஈரானின் மீது அமெரிக்காவின் நடவடிக்கையை தவிர வேறு எதனை எதிர்பார்ப்பது?’ என நெதன்யாகு கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக