திங்கள், செப்டம்பர் 17, 2012

முர்ஸி இஸ்ரேலின் பெயரைக்கூட உச்சரிக்க தயங்குகிறார் – நெதன்யாகு அங்கலாய்ப்பு !

Netanyahuடெல்அவீவ்:எகிப்து நாட்டின் அதிபர் முஹம்மது முர்ஸி பதவியேற்ற பிறகு பகிரங்கமாக இதுவரை இஸ்ரேலின் பெயரை உச்சரிக்க கூட தயங்குவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். முர்ஸி அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலின் பெயரை உச்சரிக்க தயங்குவது இஸ்ரேலுக்கு கவலையாம். சினாய் பிரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து எங்களுக்கு கவலை உண்டு. ஸினாய் எகிப்துக்கும்,
இஸ்ரேலுக்கும்முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதுத்தொடர்பாக அமெரிக்காவிடமும் எங்கள் கவலையை தெரிவித்திருந்தோம். ஆனால் எகிப்திடமிருந்து எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. முர்ஸியுடன் நேரடியாக தொடர்புகொள்ள இதுவரை இயலவில்லை. ராணுவ ரீதியான தொடர்புகளும் இதுவரை ஏற்படவில்லை. இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக