திங்கள், செப்டம்பர் 17, 2012

மெஹ்ராஜுத்தீன் வானி ஐ.பி உளவாளி !

Mehrajuddin Dandபுதுடெல்லி:1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை காந்தஹாருக்கு கடத்திய சம்பவத்தில் பங்கிருப்பதாக குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்துள்ள மெஹ்ராஜுத்தீன் ஷேக் வானி ஐந்து ஆண்டுகளாக இண்டலிஜன்ஸ் பீரோ என்ற இந்திய உளவுத்துறையின் உளவாளியாக செயல்பட்டுள்ளார். நேபாளத்தில் வியாபாரியாக இருந்த மெஹ்ராஜுத்தீனை
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஐ.பி உளவாளியாக நியமித்தது.
நேபாளத்தில் பாக். தூதரக அதிகாரிகளுடன் மெஹ்ராஜுத்தீன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவரை உளவாளியாக ஐ.பி தேர்வுச் செய்தது. பாக். தூதர் அர்ஷத் சீமாவுடன் மெஹ்ராஜுத்தீனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
மெஹ்ராஜுத்தீன் உதவியுடன் பாகிஸ்தான் ஆதரவுடன் நேபாளத்தில் இயங்கிய கள்ள நோட்டுக் கும்பலை கண்டுபிடிக்க ஐ.பியால் முடிந்ததாம். அதனிடையே 2005-ஆம் ஆண்டு உளவு வேலையை நிறுத்திவிட்ட மெஹ்ராஜுத்தீன் தனது வியாபாரத்தில் கவனம் செலுத்தினார்.
நேற்று முன்தினம் ஜம்மு-கஷ்மீர் போலீசிடம் இந்த தகவல்களை மெஹ்ராஜுத்தீன் கூறிய பிறகும் அவர்கள் நம்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக