இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானில் யூ ட்யூபிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை தடைச் செய்யும் கோரிக்கையை யூ ட்யூப் நிராகரித்ததைத் தொடர்ந்து யூ ட்யூப் இணையதளத்தை தடைச்செய்ய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் பாகிஸ்தானின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார். வீடியோவை மத அவமதிப்பு எனக்கூறிய அஷ்ரஃப், யூ ட்யூபின் செயல்பாடுகளை சகிப்புத்தன்மையுடன் காணவியலாது என்று தெரிவித்தார். இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை நீக்கம் செய்யும் வரை யூ ட்யூப் மீதான தடை தொடரும் என அவர் கூறினார்.
பாகிஸ்தான் இண்டர்நெட் எக்ஸேஞ்ச் வழியாக நாட்டின் பெரும்பாலான பயனீட்டாளர்கள் இணையதளத்தை உபயோகிக்கின்றனர். இந்நிறுவனம் அரசுக்கு கீழ் இயங்கும் பாகிஸ்தான் டெலி கம்யூனிகேஷன் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசுடன் இவ்வாறான எவ்வித ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று கூறி யூ ட்யூப் மேனேஜ்மெண்ட் பாக். அரசின் கோரிக்கை திமிர்த்தனமாக நிராகரித்தது. மேலும் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான வீடியோக்களை அப்லோட் செய்வதாக யூ ட்யூப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பாக். அரசின் கோரிக்கையை யூ டியூப் நிராகரித்ததை இயக்குநர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் யூ ட்யூப் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
2008-ஆம் ஆண்டு ஒரு டச்சுக்காரன் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வீடியோ க்ளிப்பிங்கை போஸ்ட் செய்ததைத் தொடர்ந்து யூ ட்யூபிற்கு பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக