ஸரயோ:துருக்கியில் செமிட்டிக் இனத்திற்கு எதிரான கருத்துக்களை மனித இனத்திற்கு எதிரான குற்றமாக கருதும் வேளையில் இதர ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமோஃபோபியாவை அவ்வாறு கருதவில்லை என்று துருக்கி பிரதமர் எர்துகான் குற்றம் சாட்டியுள்ளார். போஸ்னியா-ஹெர்ஸகோவினாவின் தலைநகரான ஸரயோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் எர்துகான். அப்பொழுது அவர்
கூறியது: இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிரான முஸ்லிம்களின் உணர்வை வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா பொது அவை கூட்டத்தில் எழுப்புவேன். மதங்களை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச அளவில் சட்டம் கொண்டுவர ஐ.நா அவையில் பரிந்துரையை அளிப்போம். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமோஃபோபியாவை ஆதரிக்கும் போக்கை கையாளுகின்றன. இவ்வாறு எர்துகான் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக