
இந்நிலையில் அந்த படத்தில் நபிகள் நாயகத்தின் இளைய மனைவியாக நடிக்க வைக்கப்பட்ட அன்னா குர்ஜி(21) கூறுகையில்,
இந்த படம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரானது என்று கூறாமல் நகோலா என்னை ஏமாற்றிவி்ட்டார். படத்தில் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவியாக நடித்தேன். ஆனால் ஜார்ஜ் கதாபாத்திரத்தின் பெயர் முகம்மது என்று மாற்றப்படும் என்று எனக்கு தெரியாது. நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். மத்திய கிழக்கு நாட்டு மக்கள் என் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று பயமாக உள்ளது. நான் ஒரு கத்தோலிக்கர் என்பதால் நான் வேண்டும் என்றே முஸ்லிம்களுக்கு எதிராக நடந்ததாக அவர்கள் நினைக்கலாம். நான் தூங்குவதற்கு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். பல நாட்களாக அழுது கொண்டிருக்கிறேன்.
அந்த படத்தில் எனது முகம் தெளிவாக உள்ளது. படத்தைப் பார்ப்பவர்கள் என்னைப் பார்ப்பார்கள். டெசர்ட் வாரியர்ஸ் என்ற படத்தை எடுப்பதாகத் தான் நானும், சக நடிகர்-நடிகைகளும் நம்பினோம். மதம் பற்றி இயக்குனர் பேசவேயில்லை. ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவி ஹில்லரியாக நடிக்க வேண்டும் என்றனர். பண்டைய காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் விழும் வால் நட்சத்திரம் பற்றிய படம் என்றனர்.
ஒரு நாளைக்கு ரூ.4,000 சம்பளமாகக் கொடுத்தனர். இப்படி படத்தை முடித்த பிறகு இவ்வாறு செய்வார்கள் என்று அதில் நடித்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக