முஸ்லிம் சமுதாயத்தை புண்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வெளியான சினிமா படத்துக்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது. இதனால் அமெரிக்க தூதரகம் உள்ள நாடுகளில் முஸ்லிம்கள் முற்றுகை போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பு கடந்த 2 நாட்களாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தூதரகத்தின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீஸ் பூத் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. இதனால் தூதரகத்துக்கு இன்றும், நாளையும் 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் விசா பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தூதரகம் எந்த தேதியில் திறக்கப்படும் என்ற விவரம் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக