திங்கள், மார்ச் 31, 2014

கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

 இவ்விழாவுக்கு கல்லூரி இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்கள் அலாவுதீன்,அபுல்ஹசன் சாதலி,சோமசுந்தரம்,முஹம்மது சதக் அறக்கட்டளை உறுப்பினர் முஹம்மது தாபிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர்அலி கலந்து கொண்டு பேசியதாவது:
மாணவர்கள் தங்களது தனித்திறன் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்கும் எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. மாணவர்கள் முயற்சி மேற்கொண்டால் தான் 2020-ல் இந்தியாவை வல்லரசாக்க முடியும். மாணவர்களுக்கு பெற்றோர்களும் உதவியாக இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் பல்கலைக் கழக அளவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும் பட்டங்களையும் வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) பிரகாசம், மாவட்ட உரிமையியல் நீதிபதி கவுதம், மூத்த வழக்கறிஞர் நாகராஜன், ஹமீதியா மெட்ரிக் பள்ளி தாளாளர் ஹமீது அப்துல்காதர், ஆசிரியர் புலவர் முஸ்தபா, துறைத்தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் நஜிமுதீன் மற்றும் பேராசிரியர்கள்  செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக