புதன், மார்ச் 26, 2014

முசாபர்நகர் கலவரத்தை தடுக்க உ.பி. அரசு தவறிவிட்டது: சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்


உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் மிகப் பெரிய கலவரமாக மாறியது. இதில் 43 பேர் பலியானார்கள். 93 பேர் காயம் அடைந்தனர்.


முசாபர்நகர் கலவரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் உத்தரபிரதேச அரசு இந்த கலவரத்தை அடக்க தவறிவிட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. முசாபர்நகர் கலவரத்தை அடக்க தவறி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரபிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூறியதாவது:–
உத்தரபிரதேச அரசு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறி விட்டது. கலவரத்தை தடுக்க மாநில அரசு தவறி விட்டது. கலவரம் ஏற்பட இருக்கும் தகவலை முன் கூட்டியே உளவுதுறை எச்சரிக்கை செய்யவில்லை.
முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர்கள் அனைவரையும் அரசியல் பாகுபாடின்றி கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உத்தரபிரதேச அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக