செவ்வாய், மார்ச் 25, 2014

எகிப்தில் மொர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் எகிப்து அதிபர் முகமது மொர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எகிப்து நாட்டில் முகமது மொர்சியின் பதவி ராணுவத்தால் பறிக்கப்பட்டதை அடுத்து, அங்கு அவரது ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின்போது தலைநகர் கெய்ரோவில் வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.


இது தொடர்பாக எகிப்தின் மின்யா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டும் விடுவிக்கப்படுவதாக அந்த தீர்பில் கூறப்பட்டுள்ளது.

கலவரம் ஏற்படுத்தியது தொடர்பாக 545 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒரே வழக்கில் 529 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உலக அரங்கில் அதர்ச்சியடையச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக