ஞாயிறு, மார்ச் 30, 2014

கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் இல்லை

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. 

 இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் கூறும் போது பெர்த்தில் உள்ள கடற்படை கப்பலில் கறுப்பு பெட்டி மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளது.தேவை என்றால் அது தேடப்படும் பகுதிக்கு எடுத்து செல்லப்படும்.நாங்கள் இந்த வேலைக்கான கால அளவை நிர்ணயிப்பது மிகவும் கடினம் எனறு கூறினார். இதனிடையே, கடலில் நீலம் மற்றும் பழுப்பு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் சில பொருட்கள் மிதந்ததாகவும் அது மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. 

 இந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மிதந்ததாக என்று கூறப்பட்ட குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன. சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து எடுப்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.

ஆனால் அவையெல்லாம் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பொருட்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. கண்டெடுக்கப்பட்ட பொருளில் எதுவுமே காணாமல்போன MH370 விமானத்துடன் தொடர்புடையது என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக