ஞாயிறு, மார்ச் 23, 2014

சீன புகைப்பட தகவலால் புதிய பகுதியில் விமானங்கள் அதிக அளவில் தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்டன


மாயமான மலேசிய விமானம் குறித்து பிரான்ஸ் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை பெற்றுள்ளதாகவும், அதில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெற்கு பகுதியில் செயலாற்றும் தன்மை கொண்ட பொருட்கள் கிடப்பதாக தெரிய வந்துள்ளது என்று போக்குவரத்து மந்திரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.8:30 சீன செயற்கைக்கோள் புதிதாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மிக பெரிய பொருள் கிடப்பதாக புகைப்படத்தில் காட்டியது.

இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் அதிகமான விமானங்கள் அங்கு சென்று தேடுவதற்கு அனுப்பப்பட்டு உள்ளன.  இன்று தேடுதல் நடைபெறும் பகுதி பெர்த்தில் இருந்து தென்மேற்கில் 1,550 மைல்கள் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
எனினும், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இடையூறு ஏற்படும் வகையில் பலத்த காற்றும் மற்றும் அண்டார்டிகாவை சுற்றிலும் கிழக்கு நோக்கி அலைகள் நிற்காமல் வீசி செல்வதுமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய விமானங்கள் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. அது வழக்கமாக பறக்க வேண்டிய ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மாறாக மேகம் சூழ்ந்த காரணத்தால் 450 அடி உயரத்திற்கு பறக்கும் சூழல் உள்ளது.
சூரிய வெளிச்சம் குறைவானதால் நீரில் பொருட்கள் ஏதும் இருக்கிறதாக என்பதை காண்பது கடினமான பணியாக உள்ளது.  மங்கிய வானம் மற்றும் மங்கிய நீர்பரப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து தெளிவற்ற சூழலை தேடுதல் குழுவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக