திங்கள், மார்ச் 24, 2014

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சி தேர்தல் வாக்குறுதி

எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசார பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அப்துல் சத்தார், நாஞ்சில் செய்யாதலி, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில துணை தலைவர் அன்சாரி உள்பட மாநில–மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட மாநில செயலாளர் ரத்தினம் பெற்றுக்கொண்டார். அதே போல் தேர்தல் பிரசார பாடலை இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அனிபா சாகிப் பெற்றுக்கொண்டார்.
தமிழக மீனவர் நலனை காக்க கச்சத்தீவை மீட்டெடுக்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக