ஞாயிறு, மார்ச் 23, 2014

உரிமை கோரப்படாமல் உள்ள வங்கி டெபாசிட் ரூ. 3,652 கோடி

ரிசர்வ் வங்கி, பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ. 3,652 கோடி, வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு மற்றும் கல்விக்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில், பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ. 3,652 கோடி, வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு மற்றும் கல்விக்காக பயன்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டிற்கான டெபாசிட்தாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டம்’ இறுதி வடிவம் பெற்றுள்ளதாகவும், அரசு கெஜட்டில் அறிவிக்கப்படுவதற்காக இந்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல் படாமல் உள்ள அல்லது வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் இருக்கும் வங்கி டெபாசிட்டில் உள்ள தொகை மேற்கண்ட விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும் எனவும், இவ்வகை டெபாசிட் மதிப்பு ரூ.3,652 கோடியாக உள்ளது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 15 சதவீத தொகை பாரத ஸ்டேட் பேங்கிடம் மட்டும் உள்ளதாக கூறப்படுகிறது.

உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட் தொகையை விழிப்புணர்வு நிதிக்கு மாற்றிய பிறகு வாடிக்கையாளர் கோரினால் அந்த தொகையை அவர்களுக்கு வட்டியுடன் வங்கிகள் திரும்ப அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக