செவ்வாய், மார்ச் 25, 2014

உலகின் சிறந்த வேகப்பந்து வீரர் என்பதை நிரூபித்:ஸ்டெயின்

20 ஓவர் உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்கா– நியூசிலாந்து மோதிய நேற்றைய ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா 2 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீரர் ஸ்டெய்ன் காரணமாக இருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு கடைசி 2 ஓவரில் 21 ரன் தேவைப்பட்டது. மார்னே மார்கல் வீசிய 19–வது ஓவரில் நியூசிலாந்து அணி 14 ரன் எடுத்தது. முன்னாள் கேப்டன் டெய்லர் 3 பவுண்டரி அடித்தார்.

இதன் காரணமாக கடைசி ஓவரில் நியூசிலாந்து 7 ரன் தேவைப்பட்டது. இதை எளிதாக எடுத்து அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டெய்ன் கடைசி ஓவரை வீசினார்.முதல் பந்தில் ரோஞ்சி விக்கெட்டை கைப்பற்றினார். நாதன் மேக்குல்லமுக்கு ஆடுத்த 2 பந்தில் ரன் கொடுக்காமல் சிறப்பாக வீசினார். இதனால் 3 பந்தில் 7 ரன் தேவைப்பட்டது.

4–வது பந்தில் நாதன் மேக்குல்லம் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் மீண்டும் வந்தது. 2 பந்தில் 3 ரன் தேவை. ஸ்டெயின் தனது 5–வது பந்தை அபாரமாக வீசி மேக்குல்லம் விக்கெட்டை கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.கடைசி பந்தில் வெற்றிக்கு தேவை 3 ரன். ஆனால் இப்போது பந்தை எதிர்கொண்டது ரோஸ் டெய்லர் கடைசி பந்தையும் ஸ்டெய்ன் மிகவும் சிறப்பாக வீசினார். டெய்லரால் ஒரு ரன் கூட எடுக்கமுடியாமல் ரன் அவுட் ஆனார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2 ரன்னில் வெற்றி பெற ஸ்டெயின் காரணமாக விளங்கினார். இதன்மூலம் உலகின் சிறந்த வேகப்பந்து வீரர் என்பதை ஸ்டெயின் நிரூபித்தார்.
தென்ஆப்பிரிக்காவின் துருப்பு சீட்டு ஸ்டெய்ன் அவர் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தார் என்று அந்த அணி கேப்டன் டுபெலிசிஸ் பாராட்டியுள்ளார்.
இதேபோல நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மேக்குல்லமும் ஸ்டெய்ன் பந்து வீச்சை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக