எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தருவது என கட்சியின் நிர்வாகக்குழுவில் முடிவு.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது :
எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் 26.03.2014 அன்று மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது.
கட்சியின் மாநில பொதுக்குழு முடிவின்படி தமிழகத்தில் வட சென்னை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகியதொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாட்டில் நிலவும் மதவாதம், ஊழல், மோசமானஅரசியல் கலாச்சாரம், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை, தவறான பொருளாதாரகொள்கை போன்றவற்றிற்கெதிராக போராட்ட அரசியல் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடிவருகிறது. வளர்ச்சியும் பெற்று வருகிறது.
மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ வளர்ச்சி பெறுவதும், வெற்றி பெறுவதும் காலத்தின் தேவையாகும். எனவே எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்ப்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தமிழக வாக்காளர்களை கட்சியின் நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.
எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத தமிழகம் மற்றும் புதுவையில் 37 தொகுதிகளிலும் மதவாத பா.ஜ.க கூட்டணிக்குஎதிராக மதசார்ப்பற்ற வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தி.மு.க கூட்டணியை ஆதரிப்பது என்று நிர்வாககுழு முடிவு செய்கிறது.
மதவாதம் இன்று நாடு சந்திக்கும் பேரபாயம் ஆகும். மதவாதத்தின் அடையாளமாக திகழும் நரேந்திரமோடி தலைமையிலான மதவாத கூட்டணி படுதோல்வியடைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். எனவே மதவாதத்திற்கு எதிராக வலுவான அணியாக களம் காணும் தி.மு.க கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தான் போட்டியிடாத தொகுதிகளில் ஆதரவளிக்கிறது. இந்நாட்டின் மதசார்பின்மையின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும், இதர 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ கட்சி வேண்டி கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக