எகிப்து அதிபர் முஹம்மது மோர்சியை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தால் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை அறிவிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்ட தற்காலிக (காபந்து) அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக அவர் பதவியை ராஜினாமா செததாக அரசியல் நோக்கர்கள் கருதி வரும் வேளையில், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் 20 வரை வேட்பு மனு தாக்கலும், மே 26 மற்றும் 27 தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவும் நடைபெறும். வெளிநாடுகளில் வசிக்கும் எகிப்தியர்கள் மே 15-ல் இருந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக