செவ்வாய், ஏப்ரல் 01, 2014

இங்கிலாந்தில் குழந்தைகளிடம் கொடூரமாக நடக்கும் பெற்றோருக்கு ஜெயில்

இங்கிலாந்தில் குழந்தைகள் மீது பெற்றோர்களின் அன்பு, பாசம், அரவணைப்பு போன்றவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகள் மனநலம் பாதித்த நிலையில் வளர்கிறார்கள்.


இதனால் பெற்றோர் வழிகாட்டுதல் இன்றி எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதை தடுக்க வேண்டும் என ராணி எலிசபெத் வலியுறுத்தினார்.

அதையடுத்து ‘சிண்ட்ரெல்லா சட்டம்’ என்ற புதிய சட்டம் வருகிற ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி குழந்தைகள் மீது அன்பு இன்றி கொடூரமாக நடந்து கொள்ளும் பெற்றோருக்கு 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

குழந்தைகளை அரவணைத்து வளர்க்காமல் புறக்கணிக்கும் பெற்றோருக்கும் இந்த சட்டத்தின் படி ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் இது ‘செக்ஸ் வன்முறை’ புகாருக்கு நிகரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக