வெள்ளி, மார்ச் 21, 2014

கடல் மட்ட உயர்வால் சீனாவில் அதிகரிக்கும் உணவு பொருள் கடத்தல்


ஆண்டுதோறும் சீனாவின் கடல் நீர்மட்டம் 3 மில்லி மீட்டர் உயருகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சீனாவில் கடந்த 1980 ஆம் ஆண்டிற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றம் உருவாகி வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 2.9 மில்லி மீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால், உணவு திருட்டு பெருகி வருகிறது. 

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் புயல், மழை, கடல் நீர்மட்டம் உயர்வு விளைவாக பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது.
இந்த பாதிப்பால் கடந்த 2013 ஆம் ஆண்டில் 121 பேர் உயிர் இழந்தனர். கிட்டதட்ட பல மில்லியன் இதில் குறிப்பாக தென்பகுதியில் அமைந்துள்ள "குயாங்டோங்" மாகாணமே பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.  இதனால் நடக்கும் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பை ஒழிப்பதில் போலீஸ் படை தீவிரமாக ஈடுபடுத்தப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் 10 லட்சம் டன் சர்க்கரை கடத்தப்பட்டதாக ஷாங்காய் வியாபார ஆலோசகர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக