ஞாயிறு, மார்ச் 23, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியீடுநடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி அகில இந்திய அளவில் 40 இடங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் வடசென்னை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. 

வடசென்னையில் நிஜாம் முகைதீன், நெல்லையில் முபாரக், இராமநாதபுரத்தில் நூர்ஜியாவுதீன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சார பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி 23-03-2014 ஞாயிற்றுக்கிழமை சென்னை பெரியமேடு ஹோட்டல் ஃபனாரில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை வேட்பாளர் நிஜாம் முகைதீன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அப்துல் சத்தார், நாஞ்சில் செய்யதலி, அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, தேர்தல் பணிக்குழு தலைவர் பாருக், வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், தென் சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தேர்தல் அறிக்கையை வெளியிட முதல் பிரதியை மாநில செயலாளர் ரத்தினமும், இரண்டாவது பிரதியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் சேக் முகம்மது அன்சாரியும் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தேர்தல் பிரச்சார பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையை வெளியிட இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் தொண்டு ஹனிபா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக