திங்கள், மார்ச் 31, 2014

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தமிழ் கணினி பயன்பாடு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் கணினி தொழில்நுட்பத்தை தமிழில் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நுகர்வோர், சிறு தொழில் மற்றும் உள்ளூர்மய பிரிவின் புராடக்ட் வர்த்தக மேலாளர் மேகாஷியம் கூறியது:
இந்தியாவில் 10 சதவீதம் மக்கள் ஆங்கிலம் பேசுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கணினித் துறையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதற்கு மொழி தடையாக இருப்பது ஒரு காரணம். இதனால் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி.) பயன்கள் சாதாரண மக்களுக்குச் சென்றடைவதில்லை. எனவே "மைக்ரோசாப்ட் இந்திய பாஷா' என்ற இந்திய நிறுவனம், உள்ளூர் மொழியில் கம்ப்யூட்டர் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்பதன் மூலமாகத் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் மக்களைச் சென்றடைய உதவுகிறது.
இதன்படி அசாம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, நேபாளம் என 14 மொழிகளில் கணினியை இயக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.இந்திய மொழிகளில் செயல்படும் கம்ப்யூட்டர் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனம் அரசு, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
கணினியை பயன்படுத்துவோருக்கு மொழித் தடையைப் போக்க உதவும் மைக்ரோசாப்ட் பாஷா தயாரிப்புகள்: விண்டோஸ் லாங்வேஜ், இன்டர்பேஸ் பேக்ஸ் (எல்.ஐ.பி), விண்டோஸ் எக்ஸ்பி., விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 தளங்களில் 14 உள்ளூர் மொழிகளில் செயல்படும். கீ போர்டு, பாண்ட், ஷேப்பிங், சார்ட்டிங், கலெக்ஷன் என கடைநிலை வரையிலும் உள்ளூர் மொழியில் பயன்படுத்த முடியும்.
ஆபிஸ் லாங்வேஜ் இன்டர்பேஸ் பேக்ஸ் (எல்.ஐ.பி.): ஆபீஸ் 2003, ஆபீஸ் 2007, ஆபீஸ் 2010, ஆபீஸ் 2013 ஆகியவற்றில் நான்கு முக்கிய இன்டர்பேஸ்களான வேர்டு, எக்செல், பவர் பாய்ன்ட், அவுட்லுக் ஆகியவற்றை உள்ளூர் மொழிகளில் வழங்குகிறது.
இருமொழி - மும்மொழி அகராதி, டேட்டா கன்வர்டர் என்பது பாஷா இணைய தளத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. இதன் மூலமாக யூனிகோடு அற்ற வார்த்தைகளை யுனிகோடாக மாற்ற முடியும். விக்கிபாஷா என்பது பன்மொழிகளில் விக்கிபீடியாவுக்கான கட்டுரைகளைத் தயாரிக்கப் பயன்படும் கருவியாகும். இதை மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக