ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது இந்திய அணியுடன் சென்ற மர்மப் பெண் லண்டனில் வசிக்கும் இந்தியர் என்பது தெரிய வந்துள்ளது. ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணி, களத்தில் அணிவகுத்து சென்ற போது கொடி பிடித்துச் சென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருடன் ஒரு பெண் சீருடை இல்லாமல் சென்றது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலந்து கொண்ட மற்ற வீராங்கனைகள் மஞ்சள் நிற சீருடை அணிந்து சென்றபோது இந்த பெண் சிகப்பு மற்றும் நீல உடை அணிந்து சென்றார் (படம்). தற்போது இந்தப் பெண்ணைப் பற்றிய விபரம் வெளிவந்துள்ளது. இவர் பெங்களூரைவைச் சார்ந்த மதுரா ஹனி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் லண்டனில்
வசித்து வருகிறார். ஒலிம்பிக் மைதானத்திற்குள் வருவதற்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்த இவர் இந்திய அணி, அணிவகுப்புக்கு செல்லும் போது அதனுடன் சென்றுள்ளார். இவ்வாறு இந்தப் பெண் சென்றது இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாகிகளுக்கு பலத்த அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஒலிம்பிக் போட்டி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு பெண் இந்திய அணியுடன் அணிவகுப்பில் கலந்து கொண்டது வெட்ககரமானது என இந்திய அணி பொறுப்பாளர் முரளிதர் ராஜா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக