ஜெய்ப்பூர்:காங்கிரஸில் இருந்து வெளியேறிய பி.ஏ.சங்மாவையும், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து வெளியேற்றிய ஜஸ்வந்த் சிங்கையும் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பதவிக்கு நிறுத்தியுள்ளதன் மூலம் பா.ஜ.கவில் உரிய தலைவர்கள் இல்லை என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியது: ‘குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்குரிய தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட
பி.ஏ. சங்மாவை குடியரசுத் தலைவர் பதவிக்கும், சில ஆண்டுகளுக்கு முன் தனது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜஸ்வந்த் சிங்கை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கும் பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ளது. இதிலிருந்தே இந்த உயர் பதவிகளுக்கு உரிய தலைவர்கள் அந்தக் கட்சியில் இல்லை என்று தெரிகிறது.
இதுபோலவே அந்தக் கட்சியில் பிரதமர் பதவிக்கும் தலைவர் இல்லை. இதுதான் முக்கிய எதிர்க்கட்சியின் உண்மையான நிலைமை.
குடியரசுத் தலைவர் தேர்தல் நிச்சயம் பிரணாபுக்கு சாதகமாகவே அமையும். அவரை ஆதரிப்பதாக அறிவித்த மம்தாவுக்கு எனது நன்றி. பாரதிய ஜனதாவும் பிரணாப் முகர்ஜியை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ நகராட்சித் தேர்தலில் நடந்துகொள்வது போல அந்தக் கட்சி நடந்துகொண்டது.
ராஜஸ்தானை பொருத்தவரை ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் எங்களை ஆதரிக்கும் சுயேச்சை உறுப்பினர்கள் வாக்குகள் அனைத்தையும் பிரணாப் பெறுவார் என்பது உறுதி என்றார் அசோக் கெலோட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக