திங்கள், ஜூலை 23, 2012

அரபு வசந்தத்தின் இறுதி மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையாக அமையும் – இஸ்மாயீல் ஹானிய்யா !

காஸ்ஸா:அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் உள்ள மஸ்ஜிதுல் அமீனில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது
அவர் கூறியது:
‘பரிசுத்தமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையில் அரபு வசந்தம் முடிவடையும். பாரம்பரிய எண்ணங்களையும், முன்னரே தீர்மானித்த ஒழுங்கு முறைகளயும் மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் நாம் உள்ளோம். தற்போதைய அமைப்பு முறைகள் தகர்க்கப்பட்டு புதிய அமைப்பு நிறுவப்படும். அரசியல் வரைப்படம் மாற்றி வரைக்கப்படும். பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து கீழே இறக்க முஸ்லிம் உம்மத் தீர்மானித்துள்ள முக்கியத்துவம் கட்டம் இது.
சில அரபு ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். கிலாஃபத் திரும்ப வராது என்றும், சியோனிஸ்டுகளின் விருப்பங்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாப்போம் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வாலைப் பிடித்துக்கொண்டுதான் முஸ்லிம் உம்மத் முன்னேற வேண்டும் என்றும் அந்த அரபு ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளார்கள்’ என்று ஹானிய்யா தனது உரையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக