வெள்ளி, ஜூலை 13, 2012

அதிபரிடம் கேளுங்கள்:முர்ஸியின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி !

morsiகெய்ரோ:”மக்கள் கேட்கிறார்கள்! அதிபர் பதிலளிக்கிறார்!” என்ற பெயரால் தொலைக்காட்சி சேனலில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியின் சிறப்பு நிகழ்ச்சி ரமலானில் ஒளிபரப்பாக உள்ளது.மக்களின் அனைத்து பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை அதிபரிடம் தெரிவிக்கவும், தீர்வு கிடைக்கவும் இந்நிகழ்ச்சி வாய்ப்பாக அமையும். ரமலானில் தினமும் 5
நிமிடங்கள் வீதம் இந்த சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இத்தகவலை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆமால் ஃபஹ்மி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சனைகள் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் என கருதப்படுவதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு அழைக்கவேண்டிய நேரம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை அவர் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக