புதன், ஜூலை 18, 2012

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டம் !

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது.
ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M பாக்கர், த.மு.மு.க மூத்த தலைவர் ஹைதர் அலி, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி,
இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ், தேசிய லீக் பசீர் அஹ்மத், சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக், வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிக்கந்தர், ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை  ஆற்றினர். இந்த நிகழ்ச்சியை முஹம்மத் ஹனிபா ஒருகிணைந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும், பள்ளிவாசல் ஜமாத்தார்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக