புதுடெல்லி:அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திரிகையைத் தொடர்ந்து மன்மோகன்சிங்கை பிரிட்டீஷ் பத்திரிகையான இண்டிபெண்டண்ட் கடுமையாக விமர்சித்துள்ளது. சோனியா காந்தியின் கைப்பாவை என இண்டிபெண்டண்ட் மன்மோகனை சித்தரிக்கிறது. இப்பத்திரிகையின் ஆன்லைன் எடிசனில் முதலில் மன்மோகன்சிங்கை குறித்து மோசமான வார்த்தை பிரயோகிக்கப்பட்டது. ‘அருமையான நாய்க்குட்டி’ என்ற அர்த்தம் தரும் poodle என்ற வார்த்தையை அப்பத்திரிகை பிரயோகித்தது. பின்னர் அதனை கைப்பாவை என
திருத்திவிட்டது.
‘மன்மோகன் சிங் பாதுகாவலரா அல்லது சோனியாவின் கைப்பாவையா?’ என இண்டிபெண்டண்ட் பத்திரிகை கேட்கிறது.
‘மன்மோகன்சிங்கிற்கு அரசியல் ரீதியாக எவ்வித அதிகாரமும் இல்லை. அவருடைய பதவிக்கு அவர் கடமைப்பட்டிருப்பது சோனியா காந்தியிடமாகும். அமைச்சர்களை நியமிக்க கூட அவரால் இயலவில்லை. ராகுல்காந்திக்கு வழிவிட மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் இருந்தே உயர்ந்துள்ளது. தாராள மயமாக்கலின் க்ரெட்டை நரசிம்மராவின் அரசில் இடம்பெற்றிருந்த போது பெற்றவர்தாம் மன்மோகன்சிங். ஆனால், அவர் பெற்ற புகழுக்கு தீரா களங்கம் ஏற்பட்டுவிட்டது. வரலாற்றில் இடம் பிடிக்க சொந்தமாக ஏதேனும் மன்மோகன்சிங் செய்யவேண்டும்’ என இண்டிபெண்டன் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக