இந்த ஒப்பந்தத்தின்படி, ரூ. 17,000 கோடி கடனை இந்தியாவுக்கு ரஷியா வழங்கும். இதன் மூலம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலை அமைப்பது சாத்தியமாகும். இந்த அணு உலைகளை அமைப்பதற்கு ஆகும் மொத்த மதிப்பீடு ரூ. 32 ஆயிரம் கோடியாகும். இதில், ரஷியா வழங்கும் கடனும் அடங்கும்.
ஒப்பந்தத்தில் அணு சக்தித் துறையின் சிறப்புச் செயலர் ஏ.பி. ஜோஷி, ரஷியாவின் நிதித் துறை துணை அமைச்சர் எஸ்.ஏ. ஸ்டோர்சாக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக