துபாய்:தமிழகத்தைச் சார்ந்த மீனவர்கள் பயணித்த படகின் மீது அமெரிக்க கப்பற்படை எச்சரிக்கை விடுக்காமலேயே துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. இத்தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் குமார் தெரிவித்தார்.மீன் பிடித்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த படகு மீது ஜபல் அலி துறைமுகத்தில்
இருந்து 10 கடல் மைல் தொலைவில் வைத்து அமெரிக்க கப்பற்படையினர் அநியாயமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் மூலம் எச்சரிக்கை விடுத்த பிறகும் புறக்கணித்ததால் துப்பாக்கியால் சுட்டதாக அமெரிக்க கப்பற்படை கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி துபாய் ஜபல் அலி துறைமுகத்திற்கு அருகே வைத்து USNS Rappahannock என்ற அமெரிக்க கப்பல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மீன்பிடி படகில் பயணித்த தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தோப்பு வலசை பகுதியைச் சார்ந்த ஏ.சேகர்(வயது 25) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் எம். பாண்டுவநாதன் (22), கே.முத்துக்கண்ணன் (32), ஆர்.முத்துமணிராஜ் (27) ஆகியோர் காயமடைந்து ராஷித் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தூதரிடம் விளக்கமான அறிக்கையை கேட்டுள்ளார். துபாய் போலீஸ் வழக்கை பதிவுச்செய்து விரிவான விசாரணையை துவக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக