புதுடெல்லி:பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் மேலிட தலைவர்களின் கூட்டத்தில் வைத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. சரத்யாதவ்
போட்டியிட மறுத்ததைத் தொடர்ந்து ஜஸ்வந்த் சிங்கை துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
நஜ்மா ஹெப்துல்லாஹ்வின் பெயரும் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்காக பரிசீலிக்கப்பட்டது..
ஜஸ்வந்த் சிங் தற்பொழுது டார்ஜிலிங் மக்களவை தொகுதி எம்.பியாவார். தனக்கு அளிக்கப்பட்ட மரியாதை என்று இது குறித்து பதிலளித்த ஜஸ்வந்த்சிங் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக