லண்டனில் இருந்து சானல்-4 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அந்த டி.வி. ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போர் குற்றங்களை ஆவணப்படமாக ஒளிபரப்பியது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவும் வழிவகுத்தது.
இந்த நிலையில் சானல்-4 டிவியில் இன்று காஷ்மீரில் நடந்த போர் குற்றக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ஒளிபரப்பான அந்த ஆவணப் படத்துக்கு காஷ்மீர் டார்ச்சர் டிரெயில் என்று பெயரிடப்பட்டிருந்தது.
அந்த ஆவணப் படத்தில் காஷ்மீரில் நடந்த ராணுவ குற்றங்கள் அலசப்பட்டிருந்தன. இந்திய ராணுவ அத்து மீறல் காட்சிகள் டி.வி.யில் வெளியாகி இருப்பதால் ராணுவ உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சானல்-4 தொலைக்காட்சி தவிர இங்கிலாந்தில் உள்ள சில பத்திரிகைகளும் பிரதமர் மன்மோகன்சிங் அரசை விமர்சனம் செய்து வருகின்றன.
இதனால் இங்கிலாந்து அரசுடன் கெஞ்ச வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஐ.நா.சபையில் அடுத்த தடவை நடக்கும் மனித உரிமை மாநாட்டின் போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக