
அதே நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.
முன்னதாக குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாம் உள்ளிட்ட 3 பேர்களை தெரிவித்த மமதா, இவர்களில் யாராவது ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்த யோசனையை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துவிட்டார்.
இதனால் ஏற்பட்ட கோபத்தில்,காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப்போவதில்லை என்று மம்தா அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பிரணாப்பை எதிர்த்து போட்டியிடும் சங்மா, தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மம்தாவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அது குறித்து அவர் பதிலளிக்காமல் இருந்துவந்தார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் தம்மை ஆதரிக்க கோரி மம்தாவிடம் தாம் தினமும் தொலைபேசி மூலம் பேசி வருவதாக பிரணாப் கூறியிருந்தார். அத்துடன் இது தொடர்பாக அவர் முறைப்படி ஆதரவு கோரி மம்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தலில் கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக தற்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரியே மீண்டும் போட்டியிடுகிறார்.
அதேப்போன்று பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை ஆதரிக்க வேண்டும் என்று பா.ஜனதா தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக